பிரதமர் மோடி முன்னெடுத்துள்ள ‘பாரத் கி லட்சுமி’ விளம்பர தூதர்களாக தீபிகா படுகோன், பி.வி.சிந்து அறிவிப்பு

மும்பை: பிரதமர் நரேந்திர மோடி தொடங்கியுள்ள 'பாரத் கி லட்சுமி' பிரசாரத்தின் விளம்பர தூதர்களாக இந்தி நடிகை தீபிகா படுகோன் மற்றும் டென்னிஸ் வீராங்கனை பி.வி.சிந்து ஆகியோர் அறிவிக்கப்பட்டுள்ளனர்.தீபாவளி பண்டிகையையொட்டி நாடு முழுவதும் உள்ள பெண்கள் செய்துள்ள சாதனைகளை வெளிச்சத்துக்கு கொண்டு வருவதற்காக 'பாரத் கி லட்சுமி' என்ற பிரசாரத்தை பிரதமர் மோடி தொடங்கியுள்ளார். இதுதொடர்பான வீடியோ ஒன்றை பிரதமர் மோடி தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவர் தனது டிவிட்டர் செய்தியில், “இந்தியாவின் பெண்கள் சக்தி என்பது திறமை மற்றும் விடாமுயற்சி, மன உறுதி மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றை பிரதிபலிக்கிறது.

பெண்களுக்கு அதிகாரம் அளிக்க பாடுபடுவதையே நமது பண்பாடு எப்போதும் நமக்கு கற்றுத்தருகிறது. 'பாரத் கி லட்சுமியை' கொண்டாடும் செய்தியை தீபிகா படுகோன், சிந்து ஆகியோர் இந்த வீடியோவில் சிறப்பாக வெளிப்படுத்தியுள்ளனர்” என்று கூறியிருக்கிறார். பிரதமரின் இந்த பிரசாரத்துக்கு தீபிகாவும், சிந்துவும் தங்கள் டிவிட்டர் பக்கத்தில் ஆதரவு தெரிவித்துள்ளனர்.


Popular posts
அரூரை அடுத்த சித்தேரியில் அரசால் தடை செய்யப்பட்ட கள்ளச்சாராயம் விற்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அரூர் காவல் ஆய்வாளர் எச்சரிக்கை
Image
சிதம்பரம் குமராட்சி பகுதியிலடாக்டர் அம்பேத்கார் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு குமராட்சி ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் மரியாதை செலுத்தினார்
Image
பூண்டி ஏரிக்கு தண்ணீர் வரத்து மேலும் அதிகரிப்பு
Image
சென்னையில் உள்ள மயிலாப்பூரில்E1 காவல்நிலைய மூலமாக காவல்நிலைய ஆய்வாளர் மேற்பார்வையில் இலவசமாக மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன
Image
மாணவிக்கு பாலியல் தொந்தரவு: வேலூர் அரசு பாலிடெக்னிக் கல்லூரி நூலகர் பணியிடை நீக்கம்
Image